×

வத்தலக்குண்டுவில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்: மதிமுக கோரிக்கை

 

வத்தலக்குண்டு, மே 3: வத்தலக்குண்டுவில் பேரூர் மதிமுக சார்பாக கூட்டம் நடந்தது. பேரூர் அவை தலைவர் அக்கீம் சேட் தலைமை வகித்தார். ஒன்றிய அவை தலைவர் சுரேஷ், வைகோ பாண்டி, பிச்சை முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் வால்டர் ராஜா தீர்மானங்களை முன்வைத்து பேசினார். கூட்டத்தில் கட்சியின் 31வது ஆண்டு விழாவையும், திருச்சியில் துரை வைகோ வெற்றி விழாவையும் மாவட்ட செயலாளர் செல்வராகவன் வழிகாட்டுதலின்படி கொண்டாடுவது,

வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி டாக்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது, வத்தலக்குண்டுவில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுப்பது, மே தினத்துக்கு விடுமுறை அளிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்த தலைவர் வைகோவுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஜெயராமன், அல்லா பிச்சை, கோபி, வெள்ளைப்பாண்டி, ஆட்டோ முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகி தேவேந்திரன் நன்றி கூறினார்.

The post வத்தலக்குண்டுவில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்: மதிமுக கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Government Hospital ,Vatthalakundu ,MDMK ,Berur Madhimukdu ,Vattalakundu ,Perur ,council ,president ,Akeem Said ,Union Council ,Suresh ,Vaiko Pandi ,Pichai ,Barur ,Walter Raja ,Dinakaran ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...